குவைத்தில் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" நிகழ்ச்சி
குவைத்: குவைத்தில் குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபோரத்தின்(KIFF) "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. இந்த பிரச்சராம் வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வரும் குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபோரம் (KIFF) நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா கடந்த மாதம் 30ம் தேதி மங்காஃப் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 30ம் தேதி துவங்கிய பிரச்சாரம் வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
காலை 7:30 மணிக்கு ஆரம்பமான துவக்க விழா நிகழ்ச்சிகளை கிபாயத்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்கினார். பின்னர் ஹசன் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை கேஐஎப்எப்-ன் தலைவர் அப்துல் சலாம் வெளியிட போரத்தின் தமிழ் பிரிவு தலைவர் அம்ஜத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள். தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலம், உருது என 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து சைபுதீன் (மௌலவி) அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், "தனிமனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனில் நாம் கவனம் செலுத்துவது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது. நம்மில் பலருக்கு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லை. அவ்வாறு ஆரோக்கிய வாழ்க்கை வாழ முயற்சியும் இல்லை. பெரும்பாலானவர்கள் மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகு தான் தினசரி அலுவல்களையே தொடங்குகிறார்கள்" என்று நாம் நமது ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை விவரித்தார்.
மேலும் உடற்பயிற்சியின் செய்முறை விளக்கங்களை ஷம்நாத் விளக்கி கூறினார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் அதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டியும், மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் முதல் இடம் பிடித்த சபீர் அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பஹ்ரைன் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபோரத்தின் பிரதிநிதி ராஷித் பதக்கத்தை வழங்கினார். இரண்டாவது இடத்தைப் பிடித்த அஷ்பாக் அவர்களுக்கு கேஐஎப்எப்-ன் தமிழ் பிரிவு பிரதிநிதி ராசிக் அவர்கள் பரிசு வழங்கினார்.
சிகபுதீன் (கேரளா), சிராஜ் (கர்நாடகா) அவர்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இறுதியில் சிராஜ் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications