கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம்-துபாயில் சந்திப்பு நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி 8வது அலுமினி (முன்னாள் மாணவர் சங்கம்) சந்திப்பு நிகழ்ச்சி, துபாயில் உள்ள ஜுமைராவில் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. இதில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் அமீரக அலுமினி சங்கத்தின் தலைவர் நாசிர் உசைன், செயலாளர் சோம சங்கர், பொருளாளர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்ட மதுரை அமீரக தியாக ராஜா கல்லூரியை சேர்ந்த அலுமினி சங்கத்தின் தலைவர் சிவகுமார் பேசுகையில், தமிழ்நாடு அனைத்து பொறியியல் கல்லூரி அமீரக சங்கத்திற்கு, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு அழைப்பு விடுத்தார்.
கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் தொழிலதிபரான வெங்கி கண்ணா, வேலைவாய்ப்புகளில் முன்னேற நுட்பங்களையும், வழிமுறைகளையும் எடுத்து கூறினார். இது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் மாணவர்களுக்கு, பயன் அளிப்பதாக இருந்தது. விழாவில் 50 சங்க உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
விழாவில் கலை நிகழ்ச்சிகளும், மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஜேக்கப் ரத்தினராஜ் வரவேற்புரை நிகழ்த்த, உசைன் ராசி விழாவை தொகுத்து வழங்கினார்.அமீரக அலுமினி சங்கத்தின் தலைவர் நாசிர் உசைன் நன்றியுரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை காசி ராஜன் சிறப்பாக செய்து இருந்தார்.
தற்போது நேஷனல் பொறியியல் கல்லூரியின் அமீரக அலுமினி சங்கத்தில், கடந்த 1988 முதல் 2010ம் ஆண்டு வரை நேஷனல் பொறியியல் கல்லூரியில் படித்த 120 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அமீரகத்தில் புதிதாக இணைய நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள், காசிராஜன் என்பவரை 050 148 7910 எனும் செல்போன் எண் அல்லது [email protected] எனும் மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications