மிஸ் கூவாகம் அழகிப் போட்டி.. விழுப்புரத்தில் அரவாணிகள் கூட்டம்!

கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான அரவாணிகள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு கூவாகம் சித்திரைத் திருவிழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. மே 1ம் தேதி அரவாணிகளுக்கு தாலி கட்டும் விழாவும், 2ம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
இதற்காக அரவாணிகள் ஏற்கனவே பெருமளவி்ல் கூவாகம் நோக்கி திரண்டு வருகிறார்கள். விழுப்புரம், கூவாகம் உள்ளிட்ட இடங்களில் லாட்ஜுகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல புதுவையிலும் அரவாணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பில் விழுப்புரத்தில் நாளை மிஸ் கூவாகம் எனப்படும் அரவாணி அழகிப் போட்டி நடைபெறுகிறது.
விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இப்போட்டிக்கு விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் சங்க தலைவர் ராதா தலைமை தாங்குகிறார்.
இதில் முதலில் வினாடிவினா போட்டி, பாட்டுப்போட்டி, கூந்தல்போட்டி நடைபோட்டி உள்ளிட்டவை நடக்கிறது. நடக்கிறது. இறுதியாக அழகிபோட்டி நடக்கிறது. போட்டியில் முதலிடம் பிடிக்கும் அரவாணிக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்த நடிகை மதுமிதா கிரீடம் சூட்டி பட்டத்தை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications