கலைநிகழ்ச்சிகளுடன் ஷார்ஜாவில் புத்தாண்டு விழா கொண்டாடிய நகரத்தார்

ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் (INK) 137வது கலந்துரையாடல் மற்றும் 2012 ஆங்கில புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம் 31.12.2011 சனிக்கிழமை அன்று ஷார்ஜா அல்கத்தாரி பண்ணை இல்லத்தில் நடைபெற்றது.
செல்வி.பிரவீனா சண்முகம் இறைவணக்கம் பாட, அதைதொடர்ந்து சங்கப்பாடலை செல்வி. அபர்ணா ரமேஷ், செல்வி மீனா கண்ணன் முழங்க செல்வி. விசாலாக்ஷி நடராஜன் மற்றும் செல்வி. அன்னபூரணி நடராஜன் குறளமுதம் வழங்கினார்கள். செல்வன். ராமநாதன் குமரப்பன் மகாகவி பாரதியாரின் பாடலை பாடி தொடக்கத்திற்கு மெருகேற்றினார்கள்.
கலக்கிய பெண்கள்
"நமது பூமியை காப்போம்" என்ற தலைப்பின்கீழ் உபயோகமற்ற பொருட்களை கொண்டு உபயோகமான பொருட்களை மாற்றும் போட்டியில் பெண்கள் 6 குழுக்களாக கலந்து கொண்டு பல வியக்கத்தக்க பொருட்களை செய்து காட்டினார்கள்.
அதை தொடர்ந்து சங்க செயலாளர் திரு. முத்துராமன் கதிரேசன் வரவேற்புரை வழங்கினார். 21 வது ஆண்டு நிர்வாக குழுவின் முதல் கலந்துரையாடல் என்பதையொட்டி சங்க தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் கூட்டமைப்பின் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார்.
குழந்தைகள் நடனம்
செல்வி. மீனாக்ஷி தேனப்பன் "மறைத்திருந்து பார்க்கும்" என்ற பாடலுக்கும், செல்வன்.ஜெய்சுந்தர் காசிவிஸ்வநாதன் ஆடுகளம் பாடலுக்கும் நடனம் ஆடினார்கள். செயற்குழு உறுப்பினர் திரு. ராஜகணேஷ் ராமநாதனின் மாயாஜால நிகழ்ச்சி குழந்தைகளின் மனதை வெகுவாக கவர்ந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை மகிழ்ச்சியாக பரிமாறிக்கொண்டனர்.
சங்கத்தின் புதிய கனிஇதழான "பெட்டகம்" இதழ் வெளியீடு விழா நடைபெற்றது. சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். இவ்விதழ் 45 நாட்களுக்கு ஒருமுறை வைர ஓலையாக வெளிவரும் என இதழ் ஆசிரியர் திரு. ராஜகணேஷ் ராமநாதன் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் துணை செயலாளர் திரு.O.RM.O. ராமநாதன் நன்றியுரை நெகிழ விழா இனிதே நிறைவுற்றது












Click it and Unblock the Notifications