5ம் தேதி பங்குனி உத்திரம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்
திருச்செந்தூர்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 5ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5.30 மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சி புறப்பாடு, பிற்பகல் 3 மணிக்கு யாசராட்சை தீபாராதனை, மாலை 3.45 மணிக்கு கோயிலிலிருந்து சாமி குமரவிடங்கபெருமாள் எழுந்தருளி தோள் மாலை மாற்றி திருவீதியுலா வந்தருளல், இரவுக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவில் கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளியம்மை திருக்கல்யாணம் நடக்கிறது.
உபகோயிலான நாழிமுலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சுதர்சன், தக்கார் கோட்டை மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
