துபாயில் தொழிலாளர்களுக்காக நடத்தப்பட்ட 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சி

துபாய் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பாக அமீரகத்தில் பணியாற்றி வரும் மக்களுக்கான பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த 5ம் தேதி மாலை சோனாப்பூர் முனிசிபாலிட்டி அரசங்கில் நடைபெற்றது.
இப்போட்டி இந்த முறை ஆறாம் ஆண்டாக நடைபெற்றது. இதில் 4வது ஆண்டாக தொடர்ந்து ஈ.டி.ஏ. அஸ்கான் நிறுவனம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்திரமா ஷா மற்றும் மொய்ன் கான் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு திர்ஹம் 5 ஆயிரத்திற்கான பரிசு கூப்பன், 32 இன்ச் 3டி டிவி, ஏர் அரேபியா விமான பயண சீட்டு, கிரிஸ்டல் சீல்டு உள்ளிட்ட பல்வேறு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற சந்திரமா ஷா கூறுகையில், இது தனது 2வது வெற்றி எனவும், பள்ளி நாட்களில் இருந்தே பல்வேறு பரிசுகளை தான் பெற்றதாகவும் தெரிவித்தார். மொய்ன் கான் கூறுகையில், தனக்கு கூச்சம் சுபாவம் இருந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் தான் பாடுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்து வரும் ரைட் டிராக் விளம்பர நிறுவன மேலாண்மை இயக்குநர் ரூபா வினோத் கூறுகையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொழிலாளர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகவும். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஜுன் மாதம் முதல் துவக்கப்பட்ட பல்வேறு சுற்றுப் போட்டிகளை கடந்த, கடந்த 5ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற்றது. கேம்ப் கா சாம்ப் எனும் தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியை வெஸ்டர்ன் யூனியன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஈடிஏ அஸ்கான் நிறுவன தொழிலாளர்களை நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா தலைமையில் நலத்துறை அலுவலர் அகமது சுலைமான் சிறப்புற ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications