தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பெருநாள் சந்திப்பு!
சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 04-09-2012 அன்று மாலை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரிஸ்டல் ரெசிடென்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.
மெளலவி அல்ஹாஜ் நூருத்தீன் சகாஃபி கிராஅத் ஓதினார். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க மாநிலத் தலைவர் அல்ஹாஜ் கே.ஏ.மன்சூர் வரவேற்புரை ஆற்றினார்.பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி வருகை தந்திருந்த அனைவரையும் அறிமுகப்படுத்தித் தொகுப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஜெத்தா தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் இராம்குமார், துபாய் ஈமான் அமைப்பின் ஊடகத் துறைச் செயலாளர்
முதுவை ஹிதாயத்துல்லாஹ், துபாய் இ.டி.ஏ. நிறுவன மேம்பாட்டுத் துறை மேலாளர் மொஹிதீன் பாட்சா மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்
தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தொண்டு இயக்க மாநிலப் பொருளாளர் அல்ஹாஜ் முஹம்மது சிக்கந்தர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
நீதியரசர் தமது சிறப்புரையில் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவியருக்கு மாற்றுத் திசைகளில் அவர்களது கவனம் செல்லாதிருப்பதற்குத் தகுந்த பயிற்சி
அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மாநிலச் செயலாளர் ஒட்டன்சத்திரம் அல்ஹாஜ் சேக் அப்துல் காதர் நன்றி கூறினார். திருவள்ளூர் மாவட்ட அரசு காஜி மெளலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் ரஷாதி சிறப்புத் துஆ செய்தார். அரஃபாத் டிராவல்ஸ் அல்ஹாஜ் இத்ரிஸ், மூத்த ஊடகத் துறையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பேராசிரியர்கள் டாக்டர் மு.இ.அஹமது மரைக்காயர், டாக்டர் பஹ்மானி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபஜ்லுல்லாஹ், சென்னை மெட்ரோ ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் வசீகரன் நாசர், ஏ.ஐ.என்டர்பிரைசஸ் அல்ஹாஜ் என்ஜினியர் அப்துல் மஜீத், சிறுபான்மையினர் நல அறக்கட்டளை ஷஃபி அஹ்மது, இ.டி.ஏ.மெல்கோ பொது மேலாளர் அல்ஹாஜ் ஹசன் அஹமது, இ.டி.ஏ. அபுல் கலாம் ஆஸாத், மூத்த பத்திரிக்கையாளர் மீரா மைதீன், ஜீடி.வி.அப்துல் அஜீஸ், மூன் டி.வி. முதன்மை இயக்க அலுவலர் அல்ஹாஜ் எம்.பி.எம்.அப்துல் காதர், தொழில்நுட்பத் தலைவர் ஷர்புத்தீன், மேலாளர் தாவூத்ஷா, வாணியம்பாடி முஹம்மது நயீம், மணிச்சுடர் ஷரீஃப், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பல்வேறு மண்டலப் பொறுப்பாளர்களான அல்ஹாஜ் ஃபெரோஸ்தீன், அல்ஹாஜ் காதர், ஹசன் அம்பலம், சர்ஃபுத்தீன், முஹம்மது ஹுசைன், மெளலவி முஜிபுர் ரஹ்மான், பட்ரோடு ஷர்புத்தீன், மெளலானா அப்துல் ஹை, தொழிலதிபர் நாசர் உள்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications