துபாயில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ரியல் எஸ்டேட் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழின் ஏற்பாட்டில் 'ரியால்டி இந்தியா 2012' எனும் ரியல் எஸ்டேட் கண்காட்சி கடந்த 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் ஜே.டபிள்யூ. மாரியாட் ஹோட்டலில் நடைபெற்றது.
ரியல் எஸ்டேட் கண்காட்சியினை இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் துவக்கி வைத்தார்.
இதில் மும்பை, பெங்களூர், குஜராத், மங்களூர், கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் தமிழகத்தின் பியர்ல் பீச் உள்ளிட்ட பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்திய வர்த்தகர்கள், வணிகப் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இக்கண்காட்சியினை பார்த்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் பலர் தங்களுக்கு தேவையான பிளாட்டுகளை புக்கிங் செய்தனர்.













Click it and Unblock the Notifications