துபாயில் ராபின் சர்மா கலந்து கொண்ட கருத்தரங்கு

இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா ( ICAI ) அமைப்பின் துபாய் கிளைத் தலைவர் எஸ். வெங்கடேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ராபின் சர்மா நடத்தும் இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருப்பது பெருமைக்குரியது. இவ்வமைப்பின் மைல்கல்லில் இதுவும் ஒன்று. ராபின் சர்மாவின் தலைமைப் பண்பு குறித்த கருத்துக்கள் ஒவ்வொருவரது முன்னேற்றத்திற்கான மூலதனம் எனப் பெருமையுடன் குறிப்பிடலாம் என்றார்.
உலகின் தலை சிறந்த தலைமைப்பண்பு மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்களில் ஒருவரான ராபின் சர்மா சிறப்புக் கருத்தரங்கினை நடத்தினார். அவர் தனது உரையில் உலகில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் கடின உழைப்பின் காரணமாகவே அந்நிலையினை அடைந்தனர். வரும் 20 ஆண்டுகள் வர்த்தகவியலாளர்கள் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டிய தருணமாக இருக்கும். எனவே இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு புதுமைகளைக் கண்டு வெற்றிகாண வேண்டும் என்றார்.
இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, இந்திய தூதரக முதல்நிலைச் செயலாளர் அருண் ஜெயின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கருத்தரங்கு உறுப்பினர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் அபுதாபி கிளை தலைவர் ரமேஷ் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இது போன்ற உலகப்புகழ் பெற்ற பயிற்சியாளர்களை வைத்து சிறப்புக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறினார்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் துபாய் கிளையில் 1700 உறுப்பினர்களும், அபுதாபி கிளையில் 500 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications