ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி
ஜித்தா: தஃபாரெஜ் ஜித்தா அமைப்பின் 9வது குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி இஸ்திரஹாவில் நடந்தது. அதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடிக்கடி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்து வரும் தஃபாரெஜ் ஜித்தா அமைப்பினர் இந்த முறை ஒன்பதாவது குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் குடும்பத்தினர் குழந்தைகள் சகிதமாய் கலந்து கொண்டனர். மாலை 7 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள் மறுநாள் அதிகாலை 1 மணிக்கு தான் நிறைவடைந்தன.
இந்நிகழ்ச்சியில் ஸ்கிப்பிங், ஓட்டப் பந்தயம், மியூசிக்கல் சேர், மெல்ல நடப்பது, பொது அறிவுப் போட்டி, தம்போலா, எழுத்துப் போட்டி, அறிவுத்திறன் போட்டி, வாலிபால், கயிர் இழுத்தல், செய்கை முறையில் பதிலளி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக வந்திருந்த அனைவர்களுக்கும் இரவு மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், சமோசா, குருவாசொன்ட், டோநட் குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.
தஃபாரெஜ் ஜித்தா அமைப்பினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications