திருச்செந்தூர் மாசி திருவிழா - நாளை தேரோட்டத்தை காண குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழாவில் நாளை (மார்ச் 6ம் தேதி) தேரோட்டம் நடைபெற உள்ளது. தோரோட்டத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாசி திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறகக்ப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்பரூபம் தீபாராதணை, 2 மணிக்கு அபிஷேகம், காலை 5.30 கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்திருவிழா வரும் 8ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.
இத்திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகின்றது. மாசி திருவிழாவின் முக்கிய நாட்களான 5ம் நாள் இரவு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனங்களில் உலா வந்தனர்.
கடந்த 3ம் தேதி (7ம் திருநாள்) சண்முக பெருமான் உருகு சட்டசேவைக்கு பிறகு சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, மாலை தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
திருநாளின் 8வது நாளான நேற்று சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளினார். காலை 11.15 மணிக்கு மேல் சுவாமி ஆறுமுகநயினார், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
திருநாளின் 9வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
நாளை காலையில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலையில் நடைபெறுகின்றது. காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றது. சுவாமி பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் ரத வீதிகளில் வலம் வருவார்கள்.நாளை நடைபெறும் தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், திருச்செந்தூர் நகருக்கு வந்து தங்கி உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications