துபாயில் இந்திய சுற்றுலாத்துறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், இந்திய சுற்றுலாத்துறை மத்திய கிழக்கில் இருந்து வரும் பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. குறிப்பாக மருத்துவத்துவத்திற்காக வரும் பயணிகளது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே தங்களது ஓய்விற்காக சென்று வந்த மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா மக்களின் பார்வை இந்தியாவின் மீது அதிகம் படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியா முழுதும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தங்கும் அறைகளை ஏற்படுத்திடும் முயற்சியில் இந்திய சுற்றுலாத்துறை ஈடுபட்டுள்ளது. இது குறித்து மாநில அரசுகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்குரிய முயற்சியும் நடைபெற்று வருகிறது என்றார்.
இந்திய சுற்றுலாத்துறை அமைச்சருடன், ஜார்கண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் விம்லா பிரதான், உயர் அதிகாரிகள், டிராவல்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு சுற்றுலாத்துறை குறித்த நிகழ்ச்சிகளுக்கு சென்ற பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் வந்தனர்.
மேலும் இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இக்கூட்டத்தில் அமீரக உயர் அதிகாரிகள், இந்திய தூதர் எம்.கே.லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இந்திய சுற்றுலாத்துறையின் மத்திய கிழக்கு பிராந்திய அலுவலகம், இந்தியன் அசோசியேஷன் ஆஃப் டூர் ஆபரேட்டர்ஸ், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications