ஷார்ஜாவில் பெண்களுக்கான 'உணர்வாய் உன்னை' சிறப்பு நிகழ்ச்சி!

'உணர்வாய் உன்னை' என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கடந்த 5ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில் செய்ய வேண்டிய காரியங்களை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
சூழ்நிலைகளையும், மனிதர்களையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்த்து முடிவுளை எடுத்தல், கோபம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை நீக்கி அன்பானவர்களாக மாறுதல், எண்ணத்தை வளப்படுத்தி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் முறைகள் ஆகியவற்றை குறித்து பயிற்சியாளர் பெண் பொறியாளர் ஷாமிலா சிறப்பான முறையில் பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இனி தங்களுடைய உறவினர்கள், நண்பர்களிடம் இதுநாள் வரை இருந்த உறவு முறை மேலும் பலப்படும் என்றும், வாழ்வில் நல்ல மாற்றத்திற்கு இந்த பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருந்தது எனவும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவித்தனர்.கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நினைவுகளில் இருந்து மகிழ்ச்சியான நிலைக்கு வர இந்த முகாம் உதவியாக அமைந்தது என்று சில பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான குறிப்பேடுகள், சிற்றுண்டி ஆகியவற்றை ஜம்ரத் ஜாஹீர், ரயான் அப்துல் ராஷித், பௌசியா ஜாஹீர் ஆகியோர் கொண்ட குழு வழங்கியது. தமுமுகவின் ஷார்ஜா மண்டலம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மண்டலத் தலைவர் அபுல் ஹசன், அமீரக செயற்குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் இக்பால் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இது போன்ற நிகழ்ச்சிகளை அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய இருப்பதாக நிகழ்ச்சியின் இயக்குநர் ஹூசைன் பாஷா தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications