துபாயில் செந்தமிழும் சென்னைத் தமிழும் சிறப்பு நிகழ்ச்சி, கவிதை நூல் வெளியீட்டு விழா

நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை ஷர்புத்தீன் தலைமை தாங்கினார். ஆதிபழனி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் மற்றும் இலக்கிய ஆர்வலர் உயர்திரு. எஸ்.எம். இதயத்துல்லா அவர்களும், துபாய் ஸ்கை குரூப் உரிமையாளர் உயர்திரு.சீனா தானா அவர்களும் கலந்து கொண்டனர்.
செந்தமிழும் சென்னைத் தமிழும் சிறப்பு நிகழ்ச்சியை முதன் முறையாக வானலை வளர்தமிழ் அமைப்பில் நடத்தித் தர திருமதி. ரமா மலர்வண்ணன் அவர்கள் வருகை தந்ததுடன் முத்துப்பேட்டை ஷரிபுதீன், சி.இராமலிங்கம், முகவை காளிதாஸ், சீனா தானா, திண்டுக்கல் ஜமால் மற்றும் திருமதி.ஸ்வேதா ஆகியோர் பங்கேற்க நகைச்சுவை விருந்தாய் அமைய அரங்கம் முழுவதும் கரகோஷம் ஆர்ப்பரித்தது. குறிப்பாக சென்னைத் தமிழ் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றன. பல்வேறு மொழிகளின் சங்கமமாகவே சென்னைத் தமிழ் திகழ்வதாக அறியப்பட்டது.
விழாவில் திரு.எஸ்.எம்.இதயத்துல்லா அவர்களுக்கு நூலாசிரியர் அதிரை இளைய சாகுல் பொன்னாடை அணிவிக்க நினைவுப் பரிசினை தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் திரு.ஜியாவுத்தீன் வழங்கினார். திரு.சீனா தானா அவர்களுக்கு தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் பொன்னாடை அணிவிக்க கவிஞர் தஞ்சாவூரான் நினைவுப் பரிசினை வழங்கினார்.
செந்தமிழும் சென்னைத் தமிழும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடத்தித் தந்த திருமதி. ரமா மலர்வண்ணன் அவர்களுக்கு நினைவுப் பரிசை திருமதி.சபீனா வினோத் வழங்கினார். அதிரை இளைய சாகுல் அவர்களுக்கு ஹெல்த் கணேசன் நினைவுப் பரிசினை வழங்கினார்.
ஆதலால் திரும்பிப் பார் நூலினை திரு.எஸ்.எம்.இதயத்துல்லா அவர்கள் வெளியிட திரு.சீனா தானா அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திருமதி. நர்கீஸ் பானு அவர்கள் வெளியிட திருமதி. கோமதிராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திருமதி.ஸ்வேதா வெளியிட முகவை காளிதாஸ் பெற்றுக் கொண்டார்.
உயிர் மற்றும் ஓவியம் தலைப்புகளில் திருமதி.சபீனா வினோத், திருமதி. ஸ்வேதா, திரு.சந்திரசேகர், திரு.இராமலிங்கம், கவிஞர் இளையசாகுல் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
திருமதி.நர்கீஸ் பானு நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுத்தீன், ஆதிபழனி, எம்.எம்.இப்ராஹிம் மற்றும் முதுவை ஹிதாயத்துல்லா ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications