காரமா சாப்பிடாதீங்க! கல்யாண நாளில் சிக்கலாகும்!!
ஆணோ, பெண்ணோ, திருமணம் என்பது வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய சம்பவம். அந்த நாளன்று மணமகன், மணமகள்தான் ஹீரோ, ஹீரோயின்.
அன்றைய தினத்தில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் நினைத்து பார்க்கத்தூண்டும் சந்தோச தருணங்களாகத்தான் இருக்கவேண்டுமே தவிர சோகத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக் கூடியதாக இருக்கக் கூடாது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதில் இருந்தே மணமகன், மணமகள் தங்களுடைய உடல் நலத்தை அக்கறையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். நன்றாக உறங்கி விழிப்பதில் தொடங்கி, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது வரை கவனம் செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் மணநாளில் உடல்நிலை சரியில்லாமல் டல்லடித்துப் போய் அமர்ந்திருக்க நேரிடும்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்கள் என்ன உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

காஃபின்
காஃபின் அதிகம் கலந்த உணவுப் பண்டங்களை அதிகம் உட்கொள்வதன் மூலம் ஜீரண மண்டலத்தின் பாதிப்பு ஏற்படும். தவிர முகத்தில் பரு போன்றவை தோன்ற வாய்ப்புள்ளது. எனவே காபி அதிகம் குடிப்பதற்கு பதிலாக பழச்சாறுகளை பருகுவது உடலுக்கு அரோக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.

பால், பால் பொருட்கள்
உடலுக்கு பால், பால் சார்ந்த வெண்ணெய், நெய், போன்றவை ஆரோக்கியமானதுதான். அதேசமயம், அதிக அளவில் அவற்றை உட்கொள்வதும் ஒத்துக்கொள்வதில்லை. பால் அதிகம் குடிப்பது சில சமயம் கோளாரை ஏற்படுத்திவிடும். தவிர சீஸ், பனீர், போன்றவைகளை அதிகம் உட்கொள்வது வயிறு உபாதைகளை ஏற்படுத்திவிடும். அது மணநாளன்று வேலையை காட்டிவிடும்.

ஸ்டார்ச் உணவுகள்
உருளைக்கிழங்கு, அரிசி, ரொட்டி, பாஸ்தா போன்ற கார்போஹைடிரேட் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் வாய்வுக் கோளாறு, அஜீரணம் போன்றவை ஏற்படும். சில சமயம் வாந்தி கூட வரும். எனவே உங்கள் காலை உணவுகளில் கட்டாயம் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

காரமான உணவு
காரசாரமான சிக்கன், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிறு உபாததைகள் ஏற்படும். கெட்ட வாயுக்கள் வெளியேற வாய்ப்புள்ளது. உடம்பும் சூடாகி அது முகத்தில் கொப்புளமாக வெடிக்கும். எனவே மிதமான உணவுகளையே உட்கொள்வது நல்லது.

ஆல்கஹால்
திருமணம் நிச்சயமாகிவிட்டாலே பேச்சலர்ஸ் பார்ட்டி கொடுக்கவேண்டும் என்று நண்பர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
நண்பர்களுக்கு கொடுப்பது பரவாயில்லை. மணநாளுக்கு முதல்நாள் நண்பர்களுடன் சேர்ந்து மாப்பிள்ளையும் மூக்குமுட்ட ஆல்கஹால் குடித்து விட்டு மறுநாள் மணமேடைக்கு வருவது நல்லதல்ல. இதனால் எத்தனையோ திருமணங்கள் நின்று போயுள்ளது.
எனவே திருமண நாளன்று ஜம்மென்று ஜொலிக்க மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications