அபுதாபியில் மீலாது விழா கொண்டாடிய அய்மான் சங்கம்

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். திருச்சி அய்மான் மகளிர் கலைக் கல்லூரியின் செயலாளர் அல்ஹாஜ் எம்.சையது ஜாஃபர் முன்னிலை வகித்தார். ஹாபிழ் இத்ரீஸ் மரைக்காயர் இறைமறை வசனங்கள் ஓதினார். அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்புரையாற்றினார்.
திருச்சி அய்மான் மகளிர் கலைக் கல்லூரியின் தலைவர் களமருதூர் அல்ஹாஜ் ஏ.ஷம்சுத்தீன் துவக்கவுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பனியாஸ் நிறுவன அதிபர் அல்ஹாஜ் அப்துல் ஹமீத் மரைக்காயர், அமீரக காயிதே மில்லத் பேரவைத் தலைவரும் துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளருமான குத்தாலம் அல்ஹாஜ்.ஏ.லியாகத் அலி, அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் மீலாது விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினர். தாய்ச் சபை பாடகர் தேரிழந்தூர் ஏ.தாஜுத்தீன் இஸ்லாமிய கீதங்கள் பாடினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான தென்காசி அல்தாபுர் ரப்பானிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மெளலானா அல்ஹாஜ் ஷம்சுத்தீன் உலவி, உடன்குடி மெளலவி குத்புத்தீன் ஸதகி ஆகியோர் பெருமானாரின் வாழ்வியல் வரலாற்றை விவரித்து உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், சமுதாயப் பிரமுகர்கள், ஜமாஅத் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைத் தலைவர் மானியம் ஆடூர் அல்ஹாஜ். குத்துபுதீன், பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீன், செயலாளர் களமருதூர் ஷர்ஃபுத்தீன் உள்ளிட்ட அய்மான் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
முடிவில் அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூற துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications