16ல் துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம்: ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய சுதந்திர தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள்உள்ளிட்டவற்றையொட்டி சிறப்பு ரத்ததான முகாமினை 16.08.2013 அன்று காலை 8.30 மணிக்கு அல் கரூத் பகுதியில் அமைந்துள்ள கிண்டர்கார்டன் ஸ்டார்டர்ஸ் பள்ளியில் நடத்த இருக்கிறது.

தலைமை விருந்தினராக இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, சிறப்பு விருந்தினராக துபாய் லத்திஃபா மருத்துவமனை ரத்ததான வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப் ஹைதர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ரத்ததானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நாளைக்குள்(ஆகஸ்ட் 15ம் தேதி) தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்களுடன் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

055 535 87 27, 055 19 63 613, 055 220 72 63

மின்னஞ்சல்: [email protected]

18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம்.

நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஃபியூச்சர் விஷன், கோட்டூர் இன்டீரியர்ஸ் அன்ட் பர்னிச்சர், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ, 105.4 ரேடியோ ஸ்பைஸ் ஆகியவை வழங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+