துபாயில் கோடையில் குளிர்ச்சியை ஏற்படுத்திய சிரிப்பலை
துபாய்: துபாய் உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் கடந்த 14ம் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் சர்வதசே பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசியதோடு, நகைச்சுவையாளர் சங்கம் துபாயில் வேலை செய்யும் தமிழர்களுக்கு வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் மாதந்தோரும் செயல்பட்டு வருவதாகவும், அதனை தமிழர்கள் பயன்படுத்தி கொள்ளுமாரும் வேண்டுகோள் விடுத்தார்.
நகைச்சுவையாளர் சங்க உறுப்பினர்களான ‘குபீர்' கபீர், ‘வெல்ஃபேர்' ராஜேந்திரன் மற்றும் விருந்தினர்களான வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகி காவிரிமைந்தன், ‘டோஸ்ட் மாஸ்டர்' சசி நாயர், ரவி, முகம்மது சாலிஹ், சிரிநிவாஸ், சுவாமிநாதன், குறிஞ்சிதாசன், வி.களத்தூர் ஷா மற்றும் சென்னை என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஸர்ஃப்ராஸ் சித்தீக் ஆகியோர் நகைச்சுவை பேச்சால் வந்திருந்தவர்களை சிரிக்க வைத்து மகிழ்வித்தார்கள்.
செல்வி முத்துக்கோதை, செல்வன் தண்ணீர்மலை, செல்வி. ஹரிஸ்மிதா, சிறுமி ஆயிஷா சித்தீக் ஆகியோரும் நகைச்சுவை துணுக்குகளை சொல்லி அரங்கினை அதிர வைத்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
அரங்கத்தில் சிரிப்பின் மகத்துவத்தை பற்றி தான்சான்யா நாட்டில் எடுக்கப்பட்ட லாஃபாலஜி(LAUGHOLOGY) என்ற வீடியோ காட்சியும் போட்டு காட்டப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் கோடை வெப்பத்தையும் மறந்து நகைச்சுவையால் குளிர்ந்து மகிழ்ந்து சென்றார்கள். சிறப்பு அழைப்பாளராக துபாய் ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் எம்.டி. ஆபீஸ் மேனேஜர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் சங்கத்தின் புரவலர் ‘பாலைவன நகைச்சுவைப்புயல்' கே.ஜி. குணா அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை பேச்சோடு தொகுத்து வழங்கினார். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற தாரக மந்திரத்தை நினைவுபடுத்தியதோடு நகைச்சுவை உணர்வோடு வாழ வேண்டியதின் அவசியத்தையும் அவர் வலியிறுத்தினார்.
விழா முடிவில் வந்திருந்த அனைவருக்கும் சங்கத்தின் தலைவர் முகைதீன் பிச்சை நன்றி தெரிவித்து பேசியதோடு நகைச்சுவையில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் நகைச்சுவையாளர் சங்கத்தின் மேடை என்றும் காத்திருக்கிறது என்றும், அதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாரும் கேட்டுக் கொண்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் சுல்தான், கமிட்டி உறுப்பினர்கள் அன்சாரி, மரைக்கா, காதர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.




















Click it and Unblock the Notifications