இன்று துபாயில் ஈமானின் மீலாத் பெருவிழா கொண்டாட்டம்
துபாய்: துபாய் ஈமான் (இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன்) அமைப்பு உலகத்தை உய்விக்க வந்த உத்தமத் திருநபியின் உதய தின விழாவினை மீலாத் பெருவிழாவாக ஹிஜ்ரி 1434 ரபியுல் அவ்வல் பிறை 12, 23.01.2013 அன்று மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) நடத்த இருக்கிறது என பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
விழாவுக்கு இஸ்லாமிய விவகாரத்துறையின் மூத்த ஆலோசகர் ஜாவித் அகமது கத்தீப் முன்னிலை வகிக்கிறார். தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலவி ஹாபிஸ் காரி அல்ஹாஜ் எம்.ஹெச். ஷம்சுத்தீன் உலவி விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.
மௌலவி ஷம்சுத்தீன் உலவி தென்காசி ஹஜ்ரத் ஹதீஜா பெண்கள் அரபிக் கல்லூரியின் முதல்வராகவும், ரப்பானியா கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டியாகவும், ரப்பானியா நர்சரி மற்றும் துவக்கப் பள்ளியின் தாளாளராகவும், திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராகவும், பல்சமய உரையாடல் மையத்தின் நிர்வாகக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் விழாக்குழுச் செயலாளர் கீழை ஹமீது யாசினை 050 475 30 52 எனும் அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications