ஆகஸ்ட் 1ல் குவைத்தில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி: கே-டிக் ஏற்பாடு
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி வரும் ஆக்ஸ்ட் 1ம் தேதி குவைத்தில் நடைபெறுகிறது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இவ்வருடம் குவைத்தில் முதல் முறையாக தமிழக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆ பேருரை நிகழ்த்தப்படும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றது.
குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கான அமைப்புகள் மூலமாக அவர்களின் மொழி மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு நாளில் சிறப்பு நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம். அந்த வகையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வாயிலாக மாபெரும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி மாலை 5 மணி முதல் குவைத் மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசலின் சிறப்பு இஃப்தார் கூடாரத்தில் நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஆன்மீக அறிவொளி, அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள், நிறுவனர் மற்றும் முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications