புதிய சிலபஸ்.. தேர்வு முறை.. கர்நாடக இசை கற்போருக்கு ஊக்கம் தரும் கலாசங்கமம்!
கர்நாடக இசை கற்போருக்கு ஊக்கமளிக்கவும், இசையில் ஆழந்த புலமை அடையவும் கலாசங்கமம் எனும் அமைப்பு தேர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்வில் தேறிய மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 23-ம் தேதி சென்னை கர்நாடக சங்கப் பள்ளியில் நடைபெறும் விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இசை கற்போர், கற்பிப்போர் இருதரப்புக்கும் புதிய அணுகுமுறையை கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது கலாசங்கமம். இதற்காக ஒரு புதிய பாடத் திட்டத்தையே இந்த நிறுவனம் வகுத்துள்ளது.

அதன்படி இந்தப் பாடத் திட்டம் பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் மும்மூன்று நிலைகளாக, மொத்தம் ஒன்பது நிலைகளில் தேர்வு நடத்தப்படும்.
இந்தப் பாடத் திட்டத்தில் கர்நாடக இசையில் உள்ள எல்லா உருப்படிகளும், பக்தி இசைப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் வசதிக்காக இந்தப் பாடல் ஸ்வர தாள குறிப்புகளுடன் இசை மற்றும் தியரி சேர்த்து புத்தகங்களாக கலாசங்கமம் வெளியிட்டுள்ளது.
எந்த ஒரு திறமையான இசை ஆசிரியரிடம் பயிலும் மாணவர்களும் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம். ஆண்டுக்கு மூன்று முறை, பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.
கலாசங்கமத்தின் முதல் நிலைத் தேர்வு பிப்ரவரி 3-ம் தேதி கர்நாடக சங்க பள்ளி கட்டிடத்தில் நடந்தது. இதில் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி பேராசிரியர்கள், அகில இந்திய வானொலியில் பணியாற்றிய இசை வல்லுநர்கள் அடங்கிய 13 பேர் குழு, தேர்வில் வெற்றி பெற்றவர்களை அறிவிக்கவிருக்கிறது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வரும பிப்ரவரி 23-ம் தேதி கர்நாடக சங்கப் பள்ளியிலேயே சான்றிதழ் வழங்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் எஸ்ஏகே துர்கா கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும். அவற்றை இசைக் கலைஞர் பத்மபூஷன் பிஎஸ் நாராயணஸ்வாமி வழங்குவார்.
வொர்க் ஷாப்
அடுத்த நாள் பிப்ரவரி 24-ம் தேதி, இந்த தேர்வு முறைகள், கலா சங்கமத்தின் பாடத் திட்டம் குறித்து இசை பயிற்றுநர்களுக்கு விளக்கமளிக்க பயிற்சிப் பட்டறை (வொர்க் ஷாப்) நடத்தப்படும். மேலும் யூனிசன் ஸ்கூல் ஆப் மியூசிக் டெக்னாலஜியின் 10-ம் ஆண்டு விழாவும் இந்த நிகழ்ச்சியில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி சென்னை பசுல்லா சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியின் இன்போசிஸ் ஹாலில் நடைபெறும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications