'நாதோ உபாசனா': துபாயில் ஒரு திருவையாறு
துபாய்: துபாயில் நாதோ உபாசனா எனும் கர்நாடக இசை நிகழ்ச்சியினை சாரங்கா எனும் அமைப்பு ஏற்பாட்டின் மூலம் 30.03.2013 சனிக்கிழமை மாலை ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடந்தது.
கர்நாடக இசை நிகழ்ச்சி சந்திரா கீதா கிருஷ்ணனிடம் பயின்று வரும் திறன்மிக்க மாணாக்கர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்திமாலா சுரேஷ், துணைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி ஆகியோர் பங்கேற்றனர். அமீரகத்தில் திருவையாறு இசை விழா நடைபெற்றது போன்ற உணர்வினை ஏற்படுத்தியதாக துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் ஜெகநாதன் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீதா கிருஷ்ணன், தாஹா, பிரசன்னா, பாலகிருஷ்ணன், தியாகராஜன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் இசை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடும் குயில்கள்
ஆசிரியை கீதா கிருஷ்ணனுடன் சேர்ந்து மாணவ, மாணவியர் பாடுகின்றனர்.

சின்னக்குயில்கள்
சிறுவர், சிறுமியர் கர்நாடக இசை பாடல்களை பாடுகின்றனர்.

போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் குட்டீஸ்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய குட்டீஸ் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

பாடும் வானம்பாடிகள்
மாணவிகள் மெய்மறந்து பாட்டு பாடுகின்றனர்.

குருவுக்கு மரியாதை
ஆசிரியை சந்திரா கீதா கிருஷ்ணனுக்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணாக்கர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications