கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய லண்டன் தமிழ்சங்கம்

தமிழ்க் கலாச்சாரத்தை பாரெங்கும் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இலண்டன் நியூ ஹாம் டவுன் ஹாலில் ஜனவரி 19ம் தேதியன்று மிக விமரிசையாக பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவினை தமிழ் பள்ளி மாணக்கர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி துவக்கி வைத்தனர். இதை தொடர்ந்து நாதஸ்வர கச்சேரி சிறப்பாக நடைப்பெற்றது. லண்டனை சேர்ந்த பரதக் கலைஞர் பரத நாட்டியம் மிகச்சிறப்பாக ஆடினர். தமிழ்ச் சங்கத்தின் முதியோர்கள் குழுவினர் பல பாடல்களை மிகச் சிறப்பாக பாடினர்.
தமிழ் பள்ளி மாணவர்கள் நடனம்
தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு நடனம், பாடல் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மனதை கவரும் வகையில் மிகச் சிறப்பாக வழங்கி சிறப்பித்தனர். தமிழ் பள்ளி மாணவ மாணவிகளால் திரைப்பட பாடல்களை கலவையாக கொண்டு வழங்கப் பட்ட நடன நிகழ்ச்சி விழா அரங்கை பார்வையாளர்களின் கரவோசையால் அதிர வைத்தது.
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
அழிந்து வரும் தொன்மையான தமிழ்க் கலைகளுக்கு பெருமையளிக்கும் வகையில் தமிழ்ப் பள்ளி மாணவிகளும், குடும்பத் தலைவிகளும் இணைந்து கிராமிய நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
மாற்றோர் கலைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் நடைப்பெற்ற "பாலிவுட்" நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளம் மங்கையர்களின் நடனம் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடித்தது.
சிறப்பு மிக்க இந்த விழாவில் இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டனை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். லண்டன் முருகன் கோவில் தலைமை குருக்கள் விழாவில் கலந்து கொண்டு லண்டன் தமிழ் சங்கம் கடந்த பல வருடங்களில் செய்த சேவைகளை பாராட்டி பேசி கோவில் நிர்வாகம் சார்பாக தமிழ்சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தினார். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மெட்ரோபாலிட்டன் காவல்துறை மற்றும் ஜே.எஸ் செக்யூரிட்டி நிறுவனத்தினர் மிக சிறப்பாக செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications