துபாய் சங்கீத சங்கமத்தில் நாட்டாமை சரத்குமார்
துபாய்: கடந்த 29ம் தேதி துபாயில் நடந்த சங்கமம் டிவியின் சங்கீத சங்கமம் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.
துபாய் ஜேஎஸ்எஸ் பள்ளி அரங்கத்தில் கடந்த 29ம் தேதி மாலை 6 மணியளவில் சங்கமம் டிவி- சங்கீத சங்கமம் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்தியது.
நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமீரக தேசிய கீதம் பாடப்பட்டது. நிகழ்ச்சியை திருமதி. லக்ஷ்மி ப்ரியா, திரு. சசி தொகுத்து வழங்கினார்கள்.

குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவக்கம்
திருமதி. ஷா, திருமதி. பாரதி, திருமதி. வசந்தி, திருமதி. வித்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

சிறப்பு விருந்தினராக சரத்குமார்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சுப்ரீம் ஸ்டார் திரு. சரத்குமார், சமூக சேவகி திருமதி. உமா ப்ரேமன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். சரத்குமாருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தப்பட்டது.

ஹரீஷ் ராகவேந்திராவின் இசை மழை
பிரபல பின்னனி பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா, பாடகி மின்மினி, மற்றும் துபாய் பாடகர் வெங்கட், பாடகிகள் ஷப்னம் ஷா, அஸ்வதி ஆகியோர் தமிழ் திரைப் பாடல்களை பாடி அரங்கத்தில் உள்ளவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள்.

கண்கவர் நடனம்
இசை நிகழ்ச்சியுடன் கண்கவர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிரம்பி வழிந்த அரங்கம்
சங்கமம் நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் அபுதாபி சோஷியல் சென்டர் திரு. நடராசன், முத்தமிழ் சங்க தலைவர் திரு.மோகன், தமிழ் பெண்கள் சங்கம் திருமதி. மீனாகுமாரி, ஜாகுவார் குரூப் திரு. ஷா, கராமா மெடிக்கல் சென்டர் திரு. வில்லியம், டட்கோ திரு. சிங்காரவேலன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறபித்தனர். விழா ஏற்பாடுகளை சங்கமம் டிவி டைரக்டர் திரு. கலையன்பன் மற்றும் சங்கமம் டிவி குழுவினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications