மார்ச் 8ல் துபாயில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

துபாய் ரிதம் இவென்ட்ஸ்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 8ம் தேதி துபாயில் உள்ள இந்திய பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் துபாயில் உள்ள பல்வேறு உணவகங்களில் கிடைக்கின்றன.
எஸ்.பி.பி.யின் இசை மழையில் நனைய வேண்டும் என்று நினைத்தால் டிக்கெட் விற்றுத் தீரும் முன்பு வாங்கிவிடுங்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிதம் இவென்ட்ஸின் திருமதி. சந்திரா ரவி மற்றும் திரு. சபேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 6370472 அல்லது 055 4553834 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இரவு 7.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications