குற்றாலத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் பயிலும் மாணவர்கள் சற்றொப்ப நூறு பேருக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் முதுகலை, எம்.பில், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.
பயிற்சி நாள்: 02.02.2013, மற்றும் 03.02.2013(சனி, ஞாயிறு இரண்டு நாள்).
நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4 .30 மணிவரை நடைபெறும்.
பயிற்சி வழங்குபவர்: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி
தமிழக அரசு வழங்கியுள்ள மடிக்கணினியைப் பயன்படுத்தித் தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழ்த்தட்டச்சு செய்வது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுவது, தமிழ் மின்னிதழ்களுக்கு எழுதுவது, தமிழ் ஆய்வுத்தளங்களின் அறிமுகம், சமூகவலைத்தளங்களில் எழுதுவது என்று அனைத்துநிலைப் பயிற்சியும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்ப்பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
செய்தி: முனைவர் மு. இளங்கோவன்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications