துபாயில் ப.சிதம்பரம்: மதுரை-துபாய் விமான சேவையை துரிதப்படுத்த தமிழ் அமைப்புகள் கோரிக்கை
துபாய்: துபாய் வந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து துபாய் -மதுரை விமான சேவையை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பரோடா வங்கியின் நூறாவது வெளிநாட்டு கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்ள துபாய் வருகை தந்திருந்தார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவரை அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், துபாய் விமான நிலையத்தில் சந்தித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் இருந்து வருவதாக அவர்கள் ப.சிதம்பரத்திடம் எடுத்துரைத்தனர். அதைக் கேட்ட ப.சிதம்பரம், இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி தேவையானவற்றை செய்வதற்கு தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினார்.

இது குறித்து குழுவின் சார்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நன்றி கூறிய நெல்லை எஸ்.எஸ்..மீரான், இந்தத் தடத்தில் ஏர் இந்தியாவின் சேவை மேலும் தாமதமாகும் பட்சத்தில், ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
சந்திப்பின்போது, அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணைச்செயலாளர் கீழைராஸா, காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான் ஈமான் அமைப்பின் விழா செயலர் ஹமீது யாசீன், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications