அபுதாபியில் நடந்த சங்கீர்த்தன உபன்யாசம்: சத்குரு ஞானானந்த சேவா சமாஜம் ஏற்பாடு
அபுதாபி: சத்குரு ஞானானந்த சேவா சமாஜம் அபுதாபி கிளை சார்பாக பாகவத சிரோமணி டெல்லி ஸ்ரீ நாகராஜ பாகவதர் அவர்களின் சங்கீர்த்தன உபன்யாசம் கடந்த 8ம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சி சமாஜத்தின் புரவலர் ரெங்கராஜன் தலைமையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. அப்போது ஸ்ரீ நாகராஜ பாகவதர் சத்குரு ஞானானந்த சுவாமிகள்; சுவாமி ஹரிதாஸ் கிரி மற்றும் சுவாமி நாமானந்த கிரி அவர்களது குருஞான ரசனுபாவங்களை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்து கூறினார். முதல் 45 நிமிடங்கள் குருஜி சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள் தன் குருநாதர் ஞானானந்த சுவாமிகள் மீது கருணை கொண்டு இயற்றிய "ஞான மணி மாலை" பல பாடல்களை பாடி குருபக்தியின் பெருமைகளையும், அதனால் எப்படிப்பட்ட அளப்பரிய சாதனைகளை தனக்கு குருஜி அருளி அனுக்ரஹித்தார் என்று அனுபவப்பூர்வமாக எடுத்து கூறினார்.
ஞானானந்த சேவா சமாஜம் உறுப்பினர்கள் பாகவத சிரோமணி டெல்லி ஸ்ரீ நாகராஜ பாகவதருக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர். இறுதியாக பேசிய ரெங்கராஜன் "சத்குரு ஞானானந்த சேவா சமாஜம், ஞான பால விஹார், குருஜி பால நாட்டிய மண்டலி 4வது ஆண்டு விழா வரும் மார்ச் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தென்னாங்கூர் சுவாமி நிரஞ்சனானந்த கிரி அவர்கள் தலைமையில் அபுதாபியில் நடைபெறும் என்றும் அதற்க்கு ஆஸ்திக பெருமக்கள் வந்து பெருமளவில் கலந்து கொண்டு குருவருளுக்கு பாத்திரமாகும்படி வேண்டி கொள்ளபட்டது". சமாஜத்தின் குழந்தைகள் அமைப்பான "அபுதாபி ஞான பால விஹார்" சிறுவர்களின் பாடலும், மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்த உதவிகள் பல செய்த துபாய் நாராயணன், கிருஷ்ணன் குடும்பத்தினர், அருண், சங்கர் அனைவருக்கும் சிறப்பான நன்றி தெரிவிக்கபட்டது. அபுதாபி சமாஜம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ரெகுநாதன், ஹரிஷ், பாலா, சந்திரசேகர் மற்றும் சமாஜம் உறுபினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications