துபாயில் வெளியான அலைகள், கலைகள் சிறப்பிதழ்கள்

தமிழ்த்தாய் வாழ்த்தினை முதுவை ஹிதாயத்துல்லா அவர்கள் பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. திண்டுக்கல் ஜமால் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு விருதை செய்யது ஹுசேன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.
தமிழ்த்தேர் இலக்கிய இதழின் ஆசிரியர்- கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அரட்டை அரங்கம் மற்றும் பட்டிமன்றப் புகழ் மரியம் கபீர் அவர்களும், கவிஞர் சி. இராமலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற மரியம் கபீர் அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை ததும்பும் பாணியில் வானலை வளர்தமிழ் அமைப்பின் செயல்பாடுகளைப் பெரிதும் பாராட்டினார். வாழ்க்கையில் இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர்கள், ஒரு அமைப்பின் வாயிலாக ஒவ்வொருவரின் திறமைகள் வெளிக்கொணரப்படுவதையும் அதுவும் தொடர்ந்து ஒவ்வொரு மாதம் என நீங்கள் செய்யும் சேவை போற்றுதலுக்குரியது என்றும் எடுத்துரைத்தார்.
அடுத்து சிறப்புரையாற்றிய கவிஞர் சி..இராமலிங்கம் அவர்கள், இதுவே தனது கன்னி மேடை என்றும், அரியதொரு களமாக விளங்கும் இதுபோன்ற அமைப்பினை தனக்கு அறிமுகம் தந்த முதுவை ஹிதாயத்துல்லா அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். மேடையில் பேசுவது எவ்வளவு சிரமமான பணி என்பதையும், அதனை நீக்குவதில் இதுபோன்ற வாய்ப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்றும் குறிப்பிட்டதோடு இனிவரும் கவியரங்கங்களில் தானும் தொடர்ந்து பங்கேற்பதாகக் குறிப்பிட்டார்.
அலைகள் மற்றும் கலைகள் தலைப்புகளில் கவிஞர்கள் கவிதைகள் வழங்கினார்கள். இக்கவியரங்கில் ஜெயராமன் ஆனந்தி, தஞ்சாவூரான், குறிஞ்சிதாசன், மீனா குமாரி பத்மநாதன், நர்கீஸ் பானு, ஜியாவுதீன், காவிரிமைந்தன், குத்புதீன் ஐபக், அதிரை இளையசாகுல், விருதை செய்யது ஹுசேன், ரஃபீக் சுலைமான் ஆகியோர் கவிதை வழங்கினர்.
மரியம் கபீர் அவர்களுக்கு நினைவுப் பரிசினை திரு. பத்மநாதன் வழங்கினார். கவிஞர் சி.இராமலிங்கம் அவர்களுக்கு நினைவுப் பரிசினை கவிஞர் குத்புதீன் ஐபக் அவர்கள் வழங்க, அமைப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாய் கவிதைகள் வழங்கி அமீரகத்திலிருந்து விடைபெறும் விருதை செய்யது ஹுசேன் அவர்களின் சேவையைப் பாராட்டி அவருக்கு கவிஞர் பால லலிதன் ஏலக்காய் மாலையிட்டார்.
அடுத்து, தமிழ்த்தேரின் 75வது வெளியீடான அலைகள் சிறப்பிதழை திரு. மரியம் கபீர் வெளியிட திரு. சாகுல் ஹமீது முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை கவிஞர் சி. இராமலிங்கம் வெளியிட திரு. அம்ஜத் கான் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை பதிப்பாசிரியர் ஜியாவூதீன் வெளியிட திரு. அப்துல் ஜப்பார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தமிழ்த்தேரின் 76வது வெளியீடான கலைகள் சிறப்பிதழை திருமதி. மரியம் கபீர் வெளியிட கவிஞர் தஞ்சாவூரான் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை திரு. பிரான்சிஸ் வெளியிட ஈ.டி.ஏ. ஸ்டார் திரு. ஹுசேன் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை ரங்கராஜன் வெளியிட கவிஞர் நர்கீஸ் பானு பெற்றுக் கொண்டார்.
கவியரங்கத் தலைமையேற்ற கவிஞர் ந. சந்திரசேகர் அவர்களுக்கு திண்டுக்கல் ஜமால் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார். மாதம் தோறும் இரண்டு சிறப்பிதழ்களை பதிப்பித்துத் தரும் கவிஞர் ஜியாவுதீன் அவர்களுக்கு நினைவுப் பரிசினை சுப்பையா வழங்கினார். வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் விருதை செய்யது ஹுசேன் அவர்களுக்கு நினைவுப் பரிசினை ஜியாவுதீன் தம்பதியினர் வழங்கினர்.
அடுத்த இதழ்கள் வெளியீடு 08.02.2013 வெள்ளிக்கிழமை அன்று 'உயிர்' மற்றும் 'ஓவியம்' எனும் தலைப்புகளைத் தாங்கி கராமா சிவ்ஸ்டார் பவனிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
'உயிர்' மற்றும் 'ஓவியம்' ஆகிய தலைப்புகளில் கவிதைகளையும், படைப்புகளையும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு உறுப்பினர்களையும், பங்கேற்பாளர்களையும் தமிழ்த்தேர் ஆசிரியர் குழுசார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் மூத்த உறுப்பினர் முத்துப்பேட்டை ஷர்புத்தீன் நன்றியுரையாற்றினார். குறிப்பாக அமைப்பின் நிகழ்ச்சிகளை உரிய முறையில் வெளியிட்டு ஆதரவு தரும் thatstamil.com, தினமலர் நாளிதழ், mudukulathur.com ஆகியவற்றிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, சிம்மபாரதி, ஆதிபழனி மற்றும் முதுவை ஹிதாயத்துல்லா ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications