துபாயில் விமரிசையாக நடந்த 'விவேக் 150'
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட் மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து 'விவேக் 150' எனும் தலைப்பில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவை கடந்த 12ம் தேதி அன்று மாலை இந்திய பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் வெகு விமரிசையாக நடத்தின.
ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைவர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர் தனது உரையில், சுவாமி விவேகானந்தர் இந்தியத் தாயின் மகன்களில் முக்கியமானவர். தனது ஆன்மீக உரையின் காரணமாக சமூக முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியவர். தனது சிகாகோ உரையின் மூலம் மேற்கத்திய மக்களை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர். இத்தைகைய வீரத்துறவியின் 150வது பிறந்த தினத்தை இந்திய அரசு ஜனவரி 12 முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு கொண்டாட இருப்பதாக தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதய்பூர் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் பகவதி பிரகாஷ் தனது உரையில், விவேகானந்தரின் முக்கியக் கருத்தான மனித நேய ஒருமைப்பாடு இன்றைய முக்கியத் தேவை என்றார். இறை நம்பிக்கை, உண்மை, தூய சிந்தனை, தன்னலமற்ற சேவை ஆகியன சுவாமி விவேகானந்தர் இந்தியாவிற்கும், உலகிற்கும் உதிர்த்த முத்துக்கள் என்றார். சிகாகோவில் நிகழ்த்திய தனது ஒரு சொற்பொழிவின் மூலம் உலகை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர் என்றார்.

-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications