எம்பி கனிமொழிக்கு துபாயில் சிறப்பான வரவேற்பு! அதகளப்படுத்திய அமீரக திமுக!
துபாய் சென்ற திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழிக்கு துபாயில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Recommended Video

துபாய் : திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழி எம்.பி. கடந்த புதன் கிழமை துபாய் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் அமீரக திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமீரக திமுக ஆலோசகர்களான எவர்கோல்ட் பில்டிங் கிளீனிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே. செல்வம், ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரின்ஸ் என்ற இளவரசன், அமீரக திமுக தலைவர் தொழிலதிபர் அன்வர் அலி, செயலாளர் பாவை அனிபா, விழாக்குழு செயலாளர் அப்துல்லா கனி, ஆலோசகர் ஜாஹிர், அன்பழகன், காரைக்கால் பாத்திமா, வி.களத்தூர் ஷர்புதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக ஆடிட்டர்கள் பிரின்ஸ் என்ற இளவரசன், ராஜாராம், யுகமூர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோரும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் இன்று மாலை 5 மணிக்கு துபாய் அல் முத்தீனா சாலையில் அமைந்துள்ள கிராண்ட் எக்செல்சியர் ஓட்டலில் மு. கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமீரக தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் அமீரக திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.


-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications