#FathersDay... வராத மகனை மன்னிப்பீர்களா அப்பா...?
சென்னை: ஒவ்வொரு உறவுக்கும் ஒரு மகத்துவம் உண்டு. அப்படிப்பட்ட உறவுகளில் உன்னதமானது தாய் - தந்தை உறவு. இந்த உறவுகளைக் காக்கத் தவறுவோர் காலம் முழுவதும் கண்ணீர் சுமந்தபடிதான் வாழ நேரிடுகிறது.
நமது வாசகர் பார்த்தசாரதி, தனது தந்தையுடன் இருக்க வேண்டிய முக்கியமான தருணத்தில் தான் உடன் இல்லாமல் போனது குறித்து மிகுந்த வேதனையுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்த தந்தையர் தினத்திற்காக.

சவூதி அரேபியாவிலிருந்து அவர் அனுப்பியுள்ள கவிதை மடல்...
ஊரும் உறவும் உங்களை சுற்றி
I.C.U வில் நீங்களும்...
பல்லாயிரம் மைலுக்கு அப்பால் நானும்
செயலற்ற நிலையில்...
இந்த வராத மகனை மன்னிப்பீர்களா அப்பா?
சிறு நெருஞ்சிமுள் குத்தினாலே
தாங்க முடியாத நீங்கள்
எப்படியப்பா துணிந்தீர்கள்?
ஐந்து மணி நேரம்
நெஞ்சை கிழித்து இதயத்தை காட்ட...
இந்த பத்து நாட்களில் என்னவெல்லாம்
நினைத்திருப்பீர்கள்?
அறிவியல் படித்த அகந்தையில்
இறைவனின் இருப்பையே மறுத்த எனக்கு
தெய்வமாய் தெரிகிறார்கள்
உங்கள் உயிர்காத்த மருத்துவர்கள்...
ஒருவேளை சிறுவயதில்
விளையாட்டாய் சொல்வது போல்
நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?
பாசமற்று பரதேசத்தில் கிடக்கிறேனே இன்று...
தலையில் தண்ணீரை அள்ளி அள்ளி
ஊற்றிக் கொள்கிறேன்...
ஆனாலும் நெஞ்சு கணக்கிறது...
எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?
--
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications