ஜெயலலிதாவுக்கு இன்று துபாயில் இரங்கல் கூட்டம்: தேரா ரமதா ஹோட்டலில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு துபாயில் உள்ள தமிழர்கள் இன்று இரங்கல் கூட்டம் நடத்தி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
தேரா: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவிடத்திற்கு வந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்தும் சென்னை வந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த நிலையில் துபாயின் தேரா பகுதியில் ரமதா ஹோட்டலில் இன்று மாலை துபாய் நேரப்படி 6.30 மணிக்கு இரங்கல் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் வந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications