For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் கட்டுரைப் போட்டி: கலந்து கொள்ளுங்கள், தங்க பரிசுகளை வெல்லுங்கள்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி மானுட வசந்தம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குவைத்தில் உள்ள ஜமியதுல் இஸ்லாஹ் அரங்கத்தில் வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி மாலை மானுட வசந்தம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, துணை தலைவர் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை சென்னை அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.

அதன் பிறகு நடக்கும் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் பதில் அளிக்கிறார்.

இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

Essay writing contest and Maanuda Vasantham in Kuwait

வாகன வசதிக்கு தொடர்பு கொள்க:

ஃபஹாஹீல், செனாயியா, மங்காஃப், அபூஹலீஃப்பா, மஹ்பூலா- 66178161/ குவைத் சிட்டி- 94013545

சால்மியா, ஜாப்ரியா, ஹவல்லி- 99122390/ வாஃப்ரா - 65112146 / ஜஹ்ரா, அம்கரா - 55117473

ஃபர்வானியா, ஜ்லீப் ஷூயூக், அப்பாஸியா, ஹஸாவி - 55428835 / மினா அப்துல்லாஹ் - 67689752.

முன்னதாக சமுதாயங்களுக்கிடையேயான பரஸ்பர புரிதலை மேலும் வலுப்படுத்தும் வகையில் புனித தியாகத் திருநாள் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

நபிகள் நாயகம்- எனது பார்வையில் என்ற தலைப்பில் குறைந்த பட்சம் 5 ஏ4 பேப்பர்கள், அதிகபட்சம் 10 ஏ4 பேப்பர்களில் எழுதி அதில் உங்களின் விவரத்தையும், கட்டுரையை சுயமாக எழுதியதற்கான உறுதிமொழியினையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

கட்டுரைகளை வரும் அக்டோபர் மாதம் 11ம் தேதிக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள இடங்களில் சமர்பிக்க வேண்டும்.

ஐஜிசி அலுவலகம் - ஃபஹாஹீல்

தமிழ்நாடு பெஸ்ட் சர்வீஸ் - அனைத்து கிளைகள்

டிவிஎஸ் கார்கோ அன்ட் டிராவல்ஸ் - அனைத்து கிளைகள்

சிட்டி பார்மசி - முர்காப்

கல்ஃப் மதுரை உணவகம் - மஹ்பூலா

இது குறித்து மேலும் விபரம் அறிய இஸ்லாமிய வழிகாட்டி மையத்தை 23920478, 66868270, 55488494, 69696783 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அக்டோபர் 16ம் தேதி நடைபெறும் மானுட வசந்தம் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக 3 கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக 2 கிராம் தங்கம், மூன்றாம் பரிசாக 1 கிராம் தங்கம் மற்றும் 20 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

English summary
Maanuda Vasantham programme will be held in Kuwait on october 16. An essay writing contest will be conducted for non-muslims and the winners will be given prizes in the Maanuda Vasantham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X