கொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… மணவாழ்க்கை மகிழ்ச்சியாகும்!
உண்ணும் உணவில் கூட உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்பொழுதுதான் உண்ணும் உணவு சுவைப்பதோடு சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் உடம்பில் அதிகரிக்கும்.
மண வாழ்க்கையிலும் அதுபோலத்தான் சந்தோசம் மட்டுமே இருந்தால் அதில் சுவையேதும் இல்லை. வாழ்க்கை போராடித்து விடும். எனவே வாரத்திற்கு ஒருநாளைக்காவது சின்னச் சின்ன சண்டைகள் கணவன் மனைவிக்கு இடையே இருந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்கின்றது சமீபத்திய சர்வே ஒன்று.
இந்தியாவின் மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்று இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில் புதுமணத்தம்பதிகள் முதல் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன தம்பதிகளும் பங்கேற்றனர்.

ஒத்துப் போவது நல்லதா?
தம்பதிகளுக்கு இடையே உணர்வுரீதியாகவும், மனரீதியாகவும் ஒத்துப்போவது பிணைப்பை அதிகரிக்கும். என்றாலும் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் அவசியம் என்று சில தம்பதிகள் கூறியுள்ளனர்.

மும்பை டெல்லியில்
மெட்ரோபாலிடன் நகரங்களான மும்பை, டெல்லியில் வசிக்கும் தம்பதியர் 33 சதவிகிதம் பேர் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சண்டை போடுவதாக தெரியவந்துள்ளது.

செல்லச் சண்டைகள்
20 முதல் 25 வயது தம்பதியரை ஒப்பிடும் போது 40 வயதுக்கு மேற்பட்ட தம்பதியர் மாதம் ஒருமுறை மட்டுமே சின்னச் சின்ன வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். வயதாக வயதாக புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிப்பதையே இது உணர்த்துகிறது.

பெண்கள் அதிகம்
ஆண்களில் 8 சதவிகிதம் பேர் தினசரி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். அதேசமயம் 12 சதவிகித பெண்கள் தங்களின் கணவருடன் தினசரி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.

அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விவாகரத்து செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதற்குக் காரணம் தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் மதிக்காததும், அன்பு, பாசம், பேச்சுவார்த்தை போன்றவைகளிடையே ஏற்பட்ட இடைவெளியும்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

வாரம் ஒரு சண்டை
இந்தியா முழுவதும் 44 சதவிகித தம்பதியர் வாரம் முறையாவது சண்டை போட்டுக் கொள்வோம் என்று கூறியுள்ளனர். கணவன் மனைவி இடையே புரிந்து கொள்ளாமல் பிரிவதை விட வாரம் ஒருமுறையாவது சின்னச் சின்ன செல்லச் சண்டைகள் போட்டால் உறவுப் பிணைப்பு அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்டவர்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications