அபுதாபியில் களைகட்டிய லியோனி பட்டிமன்றம்
அபுதாபி: அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பில் அபுதாபி இந்தியன் பள்ளி கலையரங்கில் 21.12..2013 அன்று மாலை 6 மணிக்கு அமைப்பின் 12 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை சங்கீதா தொகுத்து வழங்கினார்..
நிகழ்ச்சியில் புரவலர்கள் சம்பத், நோபல் மெரைன் ஷாகுல் ஹமீது ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். வாழ்த்துரை வழங்கிய சம்பத் பாரதி நட்புக்காக அமைப்பின் தமிழ்ச் சேவையைப் பாராட்டினார். தமிழ் கலை, கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் செயல்பட்டு வரும் பாரதி நட்புக்காக நிர்வாகிகளைப் வெகுவாகப் புகழ்ந்தார்.

நோபல் மெரைன் ஷாகுல்ஹமீது பேசுகையில், "இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முதல் வெளிநாட்டு தமிழர் அமைப்பு அபுதாபியின் "பாரதி நட்புக்காக" என்ற இந்த அமைப்பு தான். இந்நிர்வாகிகளின் இச்செயல் பாராட்டுக்குரியது. தொடர்ந்து பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் உள்பட பலரை "அபுதாபி பாரதி நட்புக்காக" பாராட்டி வருவதும் மிகவும் பாராட்டுக்குரியது. இன்று இவ்வரங்கமே நிறைந்திருப்பது இவ்வமைப்பினர் மீது அபுதாபி தமிழர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பே காரணம். அடுத்த வருடம் இதைவிட மிகப் பெரிய அரங்கில் விழா நடக்க ஏற்பாட செய்வோம்" என்று மக்களின் கரவொலிக்கிடையே கூறினார்.

புரவலர்களுக்கு அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் கலீல் ஆகியோர் நினைவுப்பரிசை வழங்கினர். முன்னதாக அபுதாபி நாட்டிய ஆசிரியை ஆஷா நாயரின் தலைமையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்ததாக, திண்டுக்கல் ஐ.லியோனியின் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது. "இன்றைய திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது ... நடிகர்களே...! , கதையே..!, இயக்குநர்களே..!, இசையே..! " என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்கில் அமுதா லியோனி, இனியவன், குமரி ஆதவன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
ராமகிருஷ்ணன், கலீல் உள்ளிட்ட பாரதி நட்புக்காக நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவில் அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications