இந்திய குடியரசு தினத்தையொட்டி துபாயில் நடக்கும் ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் 66-வது இந்திய குடியரசு தின விழாவையொட்டி ஈமான் கலாச்சார மையம் ரத்ததான முகாமை துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து 23.01.2015 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடத்த உள்ளது.
இந்த தகவலை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார்.

ரத்ததானம் செய்ய விரும்புவோர்:
* 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
* ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்
* எமிரேட்ஸ் ஐடி, ஓட்டுனர் உரிமம், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும்
ரத்ததானம் செய்வோர் உடலில் தாங்கள் கொடுத்த ரத்தம் 48 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்துவிடும். எனவே உயிர் காக்கும் ரத்ததானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்ச தேவையில்லை. ரத்ததானம் செய்வது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் உடலில் தானாகவே 48 மணிநேரத்தில் அதே அளவு ரத்தம் உற்பத்தியாகி விடுவதாக மருத்துவகுறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழக்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதுவை ஹிதாயத்: 050 51 96 433
கீழை ஹமீது யாசின்: 052 777 83 41
அஞ்சுகோட்டை அப்துல் ரசாக்: 055 41 45 068
http://imandubai.com/iman/?page_id=2186 என்ற இணைப்பில் சென்று பதிவு செய்யலாம்
அல்லது
[email protected] எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரத்ததான முகாம்:
துபாயில் இந்தியர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் 16.01.2015 வெள்ளிக்கிழமை காலை லத்தீபா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications