துபாயில் இரு நாட்கள் நடந்த எக்ஸ்போ நிகழ்ச்சி
துபாய்: துபாயில் இந்தியா எக்ஸ்போ 2014 நிகழ்ச்சியை அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம் 15.10.2014 அன்று ரேடிசன் புளு ஹோட்டலில் துவங்கி வைத்தார்.
ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன், ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் ஆகியவை இந்திய தூதரகம் மற்றும் கன்சுலேட் ஆதரவுடன் இரு நாட்கள் இந்த கண்காட்சியினை நடத்தின.

ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் தென் பிராந்திய சேர்மன் வால்டர் டிசோசா, ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய டைரக்டர் ஜென்ரல் ஸ்ரீபிரியா குமரியா, சன்னி ஹெல்த்கேர் குரூப் சேர்மன் டாக்டர் சன்னி குரியன், ஐடிஎல் காஸ்மாஸ் குரூப் சேர்மன் டாக்டர் ராம் புக்ஸானி ஆகியோர் முன்னிலையில் இந்திய தூதர் டி.பி. சீதாராம் கண்காட்சியினை துவங்கி வைத்தார்.

டெக்ஸ்டைல், உணவு, பேப்பர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 48 வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து வந்து இக்கண்காட்சியில் பங்கேற்றனர். சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்த வர்த்தகர்களும் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

சீதாரம் அமீரகம் இந்தியப் பொருட்களின் மறு ஏற்றுமதிக்கு ஒரு முக்கியக் கேந்திரமாக திகழ்கிறது என்றார். வால்டர் டிசோசா தனது உரையில் இந்தியா அமீரகம் இடையேயான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக கன்சல் அனிதா நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications