'நானும் மகளும் மனையாள் பிணமும் நடந்த பாதை நாட்டுக்கர்ப்பணம்!'
Subscribe to Oneindia Tamil
-கவிஞர் மகுடேசுவரன்
மனையாள் மாண்டனள்
என்செய்வேன் நான் ?
மார்பு வெடித்து
மடிந்தழுகின்றேன்.
பாடை முடையவும்
தூக்கிச் சுமக்கவும்
நகரில் எனக்கென
யாரோ வருவார் ?

இறந்தோர் வீட்டு
அழுகை கூட
வாழ்வோர் செவிக்கு
இடையூறாகும்.
தனிப்பிணத்தோடு
தவித்தேன் அழுதேன்
பிணவூர்திக்குப்
பணிந்தேன் தொழுதேன்
கைகால் அன்றி
கைப்பொருள் இல்லேன்
காசில்லை எனில்
காணக் கூசுவர்.
பழந்துணிகொண்டு
பிணத்தைச் சுற்றி
தோளில் இருத்திச்
சுமந்து நடந்தனன்.
வாழ்வு சிறக்க
வாழ்கின்றவரே...
இன்றென் முறையெனில்
நாளை உம்முறை.
என் அழுகைக்கு
விலை வைத்தோரே...
நன்று செய்தீர்
நெஞ்சு நிறைந்தீர்
நானும் மகளும்
மனையாள் பிணமும்
நடந்த பாதை
நாட்டுக்கர்ப்பணம்.
மனைவி சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, மகளுடன் 10 கி.மீ நடந்த பரிதாப நபர்.. வைரலாகும் போட்டோ












Click it and Unblock the Notifications