திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பாவை - 2

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

விளக்கம்:

வாமனாவதாரத்தில் மஹாபலி மூன்றடி மண்ணை தாரை வார்த்துக்கொடுத்தவுடன், ஆகாயம் அளவு வளர்ந்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப் பாடினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தனது மூன்றாவது பாசுரத்தில் பாடுகிறாள் ஆண்டாள்.

அந்த நாராயணனை நினைத்து அவன் நாமத்தைப் போற்றி பாடி பாவை நோன்பு நோற்று நீராடினால், நாடு முழுவதும் மாதம் மும்மாரி மழை பொழியும் என்று வாழ்த்துகிறாள் ஆண்டாள். அதனால் செழித்து வளர்ந்த பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளும். அங்குள்ள குவளை மலர்களில் புள்ளிகள் உள்ள வண்டுகள் உறங்கும். அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை கறக்குமாம். எனவேதான் ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் நாட்சியார் மங்களாசாசனம் செய்கிறாள்.

Margazhi month Tiruppavai Tiruvempavai pooja songs 3

திருவெம்பாவை - 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: முத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே... நாள் தோறும் நீ எங்கள் முன்பு வந்து இறைவனைப் பற்றி அவன் அமுதம் போன்றவன் என்று வாய் அன்னம் தித்திக்கும் படியாக பேசுவாய்... இனிமையாக பேசுவாய்... இப்போதோ உறங்குகிறாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய் என்று வீட்டிற்கு வெளியே நின்று உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர்.

அதற்கு அவளோ... பற்றுடையவர்களே... இறைவனிடத்தில் பேரன்புடைவர்களே... நீங்கள் சிவனது பழைய பக்தர்கள்... உங்களுக்கு நோன்பு என்றால் என்னவென்று தெரியும்... நான் புதியவள்... என்னுடைய தவறை பொறுத்து எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்தால் அது தீங்காகிவிடுமோ என்று கேட்கிறாள்.

அதற்கு வெளியில் இருக்கும் பெண்களோ... இறைவன் மீது நீ எத்தகைய அன்பு வைத்திருக்கிறாய் என்று எங்களுக்கும் தெரியும்... உன்னுடைய அன்புக்கு முன்னால் இந்த செய்முறை தெரியாவிட்டால் இது பெரிய விசயமா? பரவாயில்லை என்று கேட்கின்றனர்.

அதற்கு உறங்கும் பெண்ணோ... சித்தம் தூய்மையாக இருந்தால் சிவனைத்தானே பாடவேண்டும் என்று கேட்கிறாள். ஆனால் என்னைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்றும் அவள் கேட்கிறாள்.

அதற்கு வெளியில் இருக்கும் பெண்களோ... உன்னை எழுப்ப வந்த பெண்களுக்கு இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும் என்று கூறுகின்றனர். இறைவனை பாடவும் நோன்பு நோக்கவும் எழுப்புவதாகவும், அதற்கு உறங்கும் பெண் பதிலளிப்பது போலவும் அமைகிறது இந்த பாடல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+