சிங்கப்பூரில் நடந்த நீரிழிவு நோய் குறித்த இலவச மருத்துவக் கருத்தரங்கு
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 28-09-2014 அன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நீரிழிவு நோய் பற்றிய இலவச மருத்துவக் கருத்தரங்கு ஒன்றை சிங்கப்பூரில் பீட்டி சாலையிலுள்ள சிண்டா கலையரங்கத்தில் நடத்தியது.
சிங்கப்பூர் டான் டோக் செங் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜனாப் அப்துல் ஷக்கூர் இந்தக் கருத்தரங்கை நடத்தினார். கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது. சிண்டாவின் தலைமை அதிகாரி திரு. பரதன் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்டார்.

சங்கத்தின் துணைத் தலைவர் ஜனாப் கலந்தர் மொஹிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. நிக்சன் செல்வராஜ் வழி நடத்தினார். சங்கத்தின் செயலாளர் ஜனாப் அப்துல் சுபஹான் நன்றி கூறினார்.

கருத்தரங்கை நடத்திய டாக்டர் ஜனாப் அப்துல் ஷக்கூருக்கு, சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஜனாப் ஹாஜி முஹம்மது ஜாபர் பொன்னாடைப் போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.












Click it and Unblock the Notifications