இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு டிபி!
டெல்லி: இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு, மிக மோசமான காச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்தாண்டு மட்டும், இந்தியாவில், 2.7 லட்சம் பேர், இந்த நோய்க்கு பலியாகியுள்ளதாகவும், சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
கடந்தாண்டில் மட்டும், 4.5 லட்சம் பேர், புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா, சீனா, ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.
ஒருவரிடமிருந்து, மற்றவருக்கு, காற்று மூலமாக பரவுவது, காச நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான, தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் போன்றவை இருக்கும்.

காசநோய் மரணங்கள்
இந்தியாவில் மட்டும், காசநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, கடந்தாண்டில், 2.7 லட்சம் பேர் இறந்து உள்ளனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அதற்கான சிகிச்சையை பெறாமலேயே, இருக்கின்றனர் என்றும், சுகாதார நிறுவனத்தின் ஆய்வு, அடுத்த அதிர்ச்சி குண்டை போட்டுள்ளது.

உலக அளவில்
உலக அளவில்3ல்ஒருவருக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, தென்ஆப்பிரிக்க நாடுகளில்தான் டிபியினால் அதிக மரணங்கள் நிகழுகின்றன.

5 நாடுகள்
இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில்தான் அதிக அளவில் டிபி யினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள்-குழந்தைகள்
8.6 மில்லியன் பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 0.5 மில்லியன் குழந்தைகளும், 2.9 மில்லியன் பெண்களும் இந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications