சிங்கப்பூரில் கவிதைக்கு சிறப்பு செய்யும் கவிமாலை சந்திப்பு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கவிமாலை சந்திப்பின் 211ஆவது நிகழ்ச்சி நடந்தது. அதில் கவிதை விமர்சனமும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள், தங்கள் தாய்மொழியாம் தமிழை வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கென பல வாசகர் வட்டங்களை வைத்துள்ளனர்.
அம்மாதிரியான இலக்கிய வாசகர் வட்டங்களில் சங்க கால இலக்கியம் மட்டுமின்றி சமகால இலக்கியத்தையும் போற்றி வருகின்றனர். இதற்காக தாயகத்தில் இருந்து சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களை அழைத்து உரையாடலை நிகழ்த்துகிறார்கள்.

கவிமாலை சந்திப்பு
சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமை கவிமாலையின் சந்திப்பு நடைபெறும். கடந்த சனிக்கிழமை கவிமாலையின் 211-வது சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் முதலாவதாக படித்ததில் பிடித்த அங்கம் நடந்தது. அதில் கவிஞர்கள் தங்களுக்கு பிடித்த கவிதைகளை வாசித்தார்கள்.

சமகால கவிதைகள்
அதனைத்தொடர்ந்து போட்டிக்கு வந்த கவிதைகளில் சில கவிதைகளை எடுத்துக்கொண்டு கவிதை விமர்சனம் செய்தனர். அதில் கவிஞர்கள் அந்தக் கவிதைகளில் உள்ள நிறை குறைகளை பகிர்ந்துகொண்டார்கள்.

கவிதைப் போட்டி
அடுத்ததாக கவிமாலைக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய நூலை கவிஞர்.கி.கோவிந்தராசு விமர்சனம் செய்தார். மேலும் தலைமையுரை,மாணவர்கள் கவிதை வாசிப்பு, போட்டிக்கவிதை வாசிப்பு, வெற்றிபெற்ற கவிதைகளுக்கு பரிசளிப்பு என சில அங்கங்களோடு கவிமாலை நிறைவை எட்டியது.

கவிஞர்கள் கூட்டம்
நிகழ்ச்சியை கவிஞர் பாலமுருகன் நெறிப்படுத்தினார். நிகழ்வில் கவிமாலையின் காப்பாளர் மா.அன்பழகன்,சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் மற்றும் பல கவிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தி: தங்கமணி கணேசன்
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications