கபிலன் வைரமுத்துவின் இன்னொரு முகம்
"வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும்" என்று ஜீவா திரைப்படத்தில் திருவாசகமாய் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலின் லிரிக் வீடியோ யூ ட்யூபில் பட்டையைக் கிளப்பியது.
அது படத்தில் இடம்பெறாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். இவரும் காதல் பாடல்கள் மட்டும்தான் எழுதுவார் போலிருக்கிறது என்று நினைக்கும்போது வெளிவருகிறது வெண்ணிலா வீடு.

"சிலுசிலு மழையும் நஞ்சானதே ஒரு சிலந்தியின் வலையா நெஞ்சானதே" என்று ஒலிக்கும் ஒரு பேத்தோஸ் சாங் சூப்பர் ஸ்டாரின் ஊர தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் ரேஞ்சுக்கு நம்மை உலுக்கி எடுக்கிறது.
ஏற்கனவே இவர் எழுதிய பூமரேங் பூமி, உயிர்ச்சொல் போன்ற சமூகவியல் உளவியல் நாவல்கள் இவரை ஒரு பக்கம் செம சீரியஸ் ரைட்டராக அடையாளப்படுத்திய போது கடந்தமாதம் இவர் வெளியிட்டிருக்கும் மெய்நிகரி என்ற நாவல், இளமையும் நகைச்சுவையும் கலந்த ஒரு ஜாலி அனுபவமாக இருக்கிறது. இதெல்லாம் நாடறிந்ததுதான். ஆனால் கபிலனுக்கு இன்னொரு முகமும் உண்டு.
சிறு வயது முதலே கபிலன்வைரமுத்து ஒரு நேர்த்தியான மேடை பேச்சாளர். சமீபத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் அரசியல் பற்றி கபிலன் பேசிய பேச்சை கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்து கேட்டனர்.
கல்லூரி விழாக்களில் பேசும்போது கபிலன் சொல்லும் வாழ்க்கையின் மூன்று பருவம் மாணவர்கள் மத்தியில் பிரபலம். பொதுவாக கவிப்பேரரசு வைரமுத்து மைக் பிடித்தால் சபை கட்டுப்பாட்டுக்கு வரும். விழா களைகட்டும். நகரத்தில் வளர்ந்து ஆஸ்திரேலியாவில் படித்த கபிலன்வைரமுத்துவிடம் அந்த ஆளுமையின் சாயல் இருப்பது ஆச்சரியம்தான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications