துபாயில் உதவும் கரங்கள் அமைப்பு நடத்திய சேவை தினம்
துபாய்: துபாயில் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில் சேவை தினம் 04.10.2013 அன்று மாலை ஈடிஏ எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடைபெற்றது.
சேவை தினத்தையொட்டி மரம் நடுதல், மது மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் முஹம்மது ராஷிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

எம்.பி.எம். பொது மேலாளர் பி.எம்.எஸ்.ஹமீத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் தனது உரையில், பள்ளியில் படிக்கும் பருவத்தில் உதவும் கரங்கள் எனும் அமைப்பினை ஏற்படுத்தி சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த முனைந்திருக்கும் இவர்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சமூகத்தை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிப்பர் என்றார். மாணவர்களின் இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
சிறப்பு விருந்தினர் பி.எம்.எஸ். ஹமீத் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மது மற்றும் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அதனை தொழிலாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் பீர் முஹம்மது, பாலரசு, அப்துல் ரவூஃப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications