சிகாகோவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு-தமிழ்ச் சங்கங்களிடம் கருத்து கேட்பு
அமெரிக்காவின் சிகாகோவில் வரும் 2019 ஜூலை 3,4 தேதிகளில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுநடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில் வரும் 2019 ஜூலை 3,4 தேதிகளில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுநடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனிநாயக அடிகளார் 1966 -ஆம் ஆண்டு முதன் முதலாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன்பின் 1968 -ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா வெகு சிறப்பாக சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினார். அதன்பின் தொடர்ந்து பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை ,கோலாலம்பூர், மொரிசியசு, தஞ்சை ஆகிய நகரங்களில் நடத்தப்பெற்றது.

மேலும் சிறப்புற்ற அம்மாநாடு, அடுத்து திருவள்ளுவர் ஆண்டு 2050, ஆனித் திங்களில் (2019 ஜுலை) அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற உள்ளது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து இந்த மாநாட்டை சிறப்புற நடத்திட முடிவெடுத்துள்ளது.
உலகெங்கிலும் தமிழ்ப்பணி ஆற்றிவரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து, தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் கூடிய நோக்கோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, திருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனித் திங்களில் 19, 20 ஆம் நாட்களில் (3,4, ஜுலை 2019) சிகாகோ மாநகரில் சிறப்புற நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழ்ச்சங்கப் பேரவை விழா, மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50 -ஆவது ஆண்டு நிறைவு விழாவும் பெரும் மகிழ்வுடன் நடைபெற உள்ளன.
தமிழை முதன்மைப்படுத்தி, அரசியல் கலப்பின்றிநடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்குத் தமிழியல் ஆய்வில் இன்றையளவில் பெரும் பங்கு வகிக்கும் பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இவ்விழா அமெரிக்கவாழ்த் தமிழர்கள், உலகத் தமிழர்கள், உலகத் தமிழ் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் வெற்றி விழாவாக அமைய உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் எதிர்நோக்கி உள்ளனர்.
அனைத்து தமிழ்ச் சங்கங்கள் அவர்களின் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அவர்களின் பங்களிப்பும் தமிழ்த் தனித்திறனும் அவசியம் தேவை என்று 2019 உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications