எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா!
சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை தாம்பரத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஒரு எழுத்தாளரின் பார்வை, அவனது கடமை, சமூக சிந்தனை ஆகியவை குறித்து விளக்கினார்.
மேலும் எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் எழுத்து திறமை குறித்தும், சமூகத்தில் அவரது பங்களிப்பு குறித்தும் விரிவாக பேசினார்.
இந்த விழாவில், சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications