எங்கு போனது?- அஸ்வின்
Subscribe to Oneindia Tamil
அன்று வந்த அதே நிலா
இன்றும் வருகிறது ..
அன்று வீசிய தென்றல்
இன்றும் வீசுகிறது ..
ஆடிப்பாடிய கடற்கரை
அப்படியே இருக்கிறது ..
பேசிச் சிரித்த போக்கிடங்கள்
இன்றும் கலகலப்பாய் ..
கால் கடுக்க நடந்த
சாலைகள்
இன்னும் அதே குண்டு குழிகளுடன்
மழை வந்தபோது
ஒதுங்க
இடம் கொடுத்த
மரம் இன்னும் அதே பசுமையுடன்..
ஆனால்,
நம்முள் இருந்த
காதல் எங்கே?
- அஸ்வின்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications