திண்ணை!!
கரையும் காகங்கள் அல்ல
உறைந்துபோன உன் நினைவுகள்
உருக்கியெடுத்த உன் கனவுகள்
கலைத்திருக்கும் என் காலை உறக்கத்தை.
இமை பிரித்ததும்
என் கண்முன்னே தெரிவது
உன் புன்னகையொன்றே......
எனவே இனி
எனனெதிரே நீ வராதே!
ஒலிக்கும் தொலைபேசி ஒலியெல்லாம்
உன் குரல் அழைப்பாய்....
எடுத்த உடன் சொல்கிறேன்
உன் பெயரொன்றையே!
ஆதலால் நீ
அழித்துவிடு
எண்ணை....
என்னை....
உன் தோழி
உனக்கு பிடித்த பாடல்
உன் கவிதைகள்
இவையாயும
நான்குபுறம் பிணைந்த சங்கிலிகளாய்
நிஜக்கடலில் நான் நீந்தவிடுவதில்லை
தோழி மாற்று....
பாடல் மற....
கவிதை எரி....
இவையெல்லாம் செய்தேனென்றே
எனக்கொரு கடிதம் எழுது
உன் நினைவுகளை தட்டியெழுப்பாத
கடலில் இருண்ட ஆழத்தில்
கடிதம் புதைக்கிறேன்!
இறுதியாக
உன்னை தீண்டி சிலிர்த்த விரல்கள்,
உன் நெருக்க சுவாசத்தில்
உனக்கும் கேட்க
துடித்த இதயம்,
உன் கண்களில் வழிந்த
வெட்கம் பருகிய என் கண்கள்
உன் ஆடை அணிந்து
உன்னை தழுவியதாய்
தகித்த என் தேகம்
எல்லாவற்றையும் சிதைத்து
என் காதல்
எரித்து விடுகிறேன்!
பின் என்னை நான்
கொலை செய்த குற்றத்திற்காய்
மரண தண்டனையென தீர்பெழுதி
என் கடைசி கவிதை
காற்றில் அலைந்திருக்கும்!
- பாஷா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications