சொல்லி இருக்கலாம்- ஷைலஜா
காதல் தூண்டிலை விரித்து
என் கண் மீன்களை
சிக்க வைத்தாய்..
சாதல் தான் நீ
இல்லையேல்..என்று
சகலமும் என்னிடம்
பகிர்ந்து கொண்டாய்..
வேதனை மிகு
ஒரு வெப்ப நாளில்
வெறும் வார்த்தை போல
"என்னை மறந்து விடு என்றாய்
பாதகா, நீ சொன்னதென்ன
பாகாய் இனிக்குமா..
பாவி என்னை சிலுவையில்
அறைந்தே விட்டாய்..
சேதமான உணர்வுகளுடன்
வாழும் என்னிடம்,
நீ செத்துப் போ என்றே
சொல்லி இருக்கலாம்.
- ஷைலஜா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. பகல் பொழுது
2. விலகியே இரு
3. ப்ளாஸ்டிக் மனசு
4. சொல்லாமல் கொள்ளாமல்..
5. புரிந்துகொள்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications